ஜிஎஸ்டி-யின் கீழ் நிறுவனங்கள் பதிவு: தலைமை செயலர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு

ஜிஎஸ்டி-யின் கீழ் நிறுவனங்கள் பதிவு: தலைமை செயலர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
Updated on
1 min read

மத்திய அரசின் துடிப்பான நிர்வாகம் மற்றும் திட்டங்களை சரியான நேரத் தில் அமல்படுத்துதல் (பிரகதி) திட் டத்தின் கீழ் அரசு துறைகளில் செயல் படுத்தப்படும் பல்வேறு திட்டங் களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாநில அரசுகளின் உயரதிகாரிகளுடன் டெலி கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள், அனைத்து நிறுவனங்களும் ஜிஎஸ்டி.யின் கீழ் பதிவு செய்யப் படுவதை உறுதிப்படுத்தும்படி, அனைத்து மாநில தலைமை செயலர் களுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட் டுள்ளார். தவிர மத்திய பொதுப் பணித் துறையில் மேற்கொள்ளப் படும் பணிகளின் நிலை, குறைகள், திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகளின் வேகம் உட்பட பல் வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கேட்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை 3-வது ரயில் தடம், சென்னை கடற்கரை - அத்திப் பட்டு 4-வது வழித்தடம் உட்பட பல் வேறு ரயில்திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

இவற்றில் சில திட்டங்கள் 10 ஆண்டுகளாக தாமதமாகி இருப் பதை அறிந்த பிரதமர், அந்தத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி சம்பந் தப்பட்ட மாநில தலைமை செயலர்களை வலியுறுத்தினார்.

இவ்வாறு பிரதமர் அலு வலக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in