3 ஹிஸ்புல் தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

3 ஹிஸ்புல் தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை

Published on

மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பட்காம் மாவட்டத்தின் ரெட்பக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டு, நேற்று காலை மீண்டும் தொடங்கியது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள், ஆகிப் குல், ஜாவைத் அகமது ஷேக், சாஜித் அகமது என்றும் இவர்கள் முறையே கூரிபோரா, பீர்வா, மலரட்டா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in