இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: சுமித்ரா மகாஜன் ஏற்பாடு

இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: சுமித்ரா மகாஜன் ஏற்பாடு
Updated on
1 min read

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சற்று முன்கூட்டியே (நாளை) தொடங்குகிறது. இக்கூட்டத் தொடர் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத் தொடரில், சீனாவுடனான மோதல், காஷ்மீர் பிரச்சினை, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கோரிக்கை வைப்பார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in