திலீப்புக்கு தொடர்ந்து ஜாமீன் மறுப்பு

திலீப்புக்கு தொடர்ந்து ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

அங்கமாலி நீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 25-ம் தேதி வரை அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி காரில் வீடு திரும்பி கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல்ரீதியாக துன்புறுத்தியது. இதுதொடர்பாக பல்சர் சுனில் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மாஜிஸ்திரேட் நிராகரித்ததால் அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே நீதிமன்ற அனுமதி யுடன் நடிகர் திலீப்பை போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். மூன்று நாள் போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கமாலி நீதிமன்றத் தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப் பட்டார்.

அப்போது போலீஸார் மீது திலீப் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. திலீப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்குமார், நடிகரின் 2 செல்போன்களையும் ஆய்வுக்காக நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

முன்னதாக திலீப் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த மாஜிஸ்திரேட், வரும் 25-ம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் மீண்டும் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகர் திலீப் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் நாளை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒத்துழைக்க மறுப்பு

நடிகர் திலீப்பிடம் போலீஸார் ஏற்கெனவே பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து பல்வேறு இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்றும் விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டா ரங்கள் கூறியபோது, பெரும் பாலான கேள்விகளுக்கு திலீப் பதில் அளிக்கவில்லை. சில கேள்வி களுக்கு நக்கலாக சிரித்தார். ஆரம்பம் முதலே அவர் விசா ரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார் என்று தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in