

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பயிற்சி விமானம் நேற்று விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்தூரில் ‘பிளையிங் கிளப்’ ஒன்றுக்கு சொந்தமான இந்த விமானத்தில் நேற்று 2 பேர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தேவி அகல்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அங்கு ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.