கடந்த 6 நாட்களில் மட்டும் 80 ஆயிரம் யாத்ரீகர்கள் அமர்நாத் பனிலிங்க தரிசனம்

கடந்த 6 நாட்களில் மட்டும் 80 ஆயிரம் யாத்ரீகர்கள் அமர்நாத் பனிலிங்க தரிசனம்
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை தொடரில் உள்ள அமர்நாத் குகை யில் உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை யாத்திரை நடைபெறுகிறது.

அமர்நாத் செல்லும் யாத்ரீகர் கள் மீது தாக்குதல் நடத்த தீவிர வாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் உச்சகட்டப் பாது காப்புப் போடப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரையானது 2 வழித்தடங்களில் தொடங்குகிறது. தெற்கு காஷ்மீரின் பகல்காம் முகாமில் இருந்து 46 கிலோ மீட்டர் தூரம் பயணித்தும் அல்லது வடக்கு காஷ்மீரின் பலதால் முகாமில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் பயணித்தும் குகையை அடையலாம். இந்த 2 முகாம்களில் இருந்தும் ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் கடந்த 6 நாட்களில் 80 ஆயிரம் பேர் பனிலிங்கத்தைத் தரிசனம் செய்திருப்பதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இந்நிலை யில் 3,389 பேர் அடங்கிய மற் றொரு குழு யாத்திரையைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அவர்கள் செல்லும் வழித்தடங் களில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in