

திங்கள் மதியம், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் காந்திநகருக்கு வெளியே உள்ள காட்டுக்கு அருகே உயர் மின் அழுத்த மின்கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று பலியாகியுள்ளது.
உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாவட்ட வனத்துறை அதிகாரி வி.எஸ்.வி. பிரசாத் சம்பவ இடத்துக்கு வருகை தந்து கூறும்போது, “வேட்டையாடுபவர்கள் பொதுவாக புலிகளையே கொல்வார்கள், சிறுத்தையை அல்ல, புலிகளை அதன் நகத்துக்காக வேட்டையாடுவார்கள். சிறுத்தை மரம், மின்கம்பம் ஆகியவற்றில் ஏறும் பழக்கம் உடையது. இதனால் மின் கம்பியில் சிக்கி பலியாகியிருக்கலாம்” என்றார்.
ஞாயிறு இரவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம், விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் புதைக்கப்படும் என்றார் அவர்.