

பிரதமரின் ஜன்-தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 8 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஜன்-தன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதன்படி 2015-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதிக்குள் 7.5 கோடி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை 7.98 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங் கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26-க்குள் இது 10 கோடியாக அதிகரிக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, ஒவ்வொரு கிராமத்திலும் வங்கிக் கிளைகள் இல்லாவிட்டாலும் ஏடிஎம் மையங் களை திறக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அத் துடன் ஒவ்வொரு கிராமத்துக்கும் வங்கி சார்பில் ஒரு வர்த்தக பிரதி நிதியை நியமிக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது. இதன்மூலம் வங்கி சேவையை நாடு முழுவதும் விரி வாக்கம் செய்ய அரசு விரும்புகிறது.
சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், தவறாக பயன்படுத்தப்படு வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.