பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

பாவனா கடத்தல் வழக்கு:  நடிகர் திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு ‘120 பி’யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி திலீப் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிமன்றத்தால் நிராக்கரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜாமீன் கேட்டு நடிகர் திலீப் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் திலீப்புக்கு ஜாமீன் வழங்க மீண்டும் மறுத்துவிட்டன. மேலும் திலீப்பை காவலில் எடுத்து விசாரிக்க சனிக்கிழமை மாலைவரை போலீஸுருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாவனா கடத்தல் தொடர்பாக ஆதாரம் திரட்டுவதற்காக, நடிகர் திலீப் வியாழக்கிழமை திருச்சூரில் உள்ள ஜாய்ஸ் ஓட்டல், தி கருடா ஓட்டல், கினாடிங்கல் டென்னிஸ் அகாடமி ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதில் திலீப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்கள் கிடைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in