மணல் கொள்ளை: சட்டத்தை மீறுபவர்களைக் கைது செய்க; சந்திரபாபு நாயுடு கண்டிப்பு

மணல் கொள்ளை: சட்டத்தை மீறுபவர்களைக் கைது செய்க; சந்திரபாபு நாயுடு கண்டிப்பு
Updated on
1 min read

ஆந்திர அரசின் இலவச மணல் திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் விதமாக சட்ட விரோத மணல் மாஃபிய கும்பலை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

“சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடையுங்கள்” என்று செவ்வாயன்று அமைச்சரவைக் கூட்டத்தில் திட்டவட்டமாக, கண்டிப்புடன் கூறினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆற்று மணலை இலவசமாக்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது, அதாவது போக்குவரத்து செலவுகள் மட்டுமே பயனாளர்களுக்கானது. ஆனால் போக்குவரத்து நிறுவனங்களும் மணல் மாஃபியாக்களும் கடுமையான விலைகளை நிர்ணயித்து வசூலித்து வருகின்றனர் .

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி, போக்குவரத்து அதிகாரி மற்றும் சுரங்கத்துரை உதவி இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழுவை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்தக் குழு போக்குவரத்து உரிமையாளர்கள் என்ன தொகை வசூலிக்கிறார்கள் என்பதை கண்காணிக்கும். மணலை ஏற்றி இறக்கும் கட்டணத்தையும் இந்தக்குழுவே முடிவு செய்யும்.

இந்தக் கட்டணத்துக்குக் கூடுதலாக வசூலித்தால் கடும் தண்டனை நிச்சயம் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in