Published : 09 Jul 2017 10:49 AM
Last Updated : 09 Jul 2017 10:49 AM

இருநாட்டு எல்லையில் பதற்றம் எதிரொலி: இந்தியாவுக்கு பயணம் செய்யும் குடிமக்களுக்கு சீனா எச்சரிக்கை

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாட்டு எல்லைகளும் சந்திக்கின்றன. அங்குள்ள டோகா லா என்ற பகுதியில் சீனா ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது.

இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நீடிக்கிறது.

இந்நிலையில், சீனா வெளி யுறவுத்துறையின் அறிக்கையை டெல்லியில் உள்ள சீனா தூதரகம் நேற்று வெளியிட்டது. சீனா மொழி யில் உள்ள அந்த அறிக்கையில், “இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும், தங்களுடைய உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அந்நாட்டு சட்டங்கள் மற்றும் விதி முறைகளையும் உள்ளூர் மத நடைமுறைகளையும் மதித்து நடக்க வேண்டும். தங்களுடன் அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அவசர தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துணை தூதரகத்தை தொடர்பு கொள் ளவும்” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அது பயண எச்சரிக்கை அல்ல. சீனர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தப் பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x