

உலகின் உயர்ந்த போர்க் களமான சியாச்சின் மற்றும் நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் ராணுவத்தினருக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் படித்தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
7-வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளில் சிறிய அளவில் மாற்றம் செய்து அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை படி (அலவன்ஸ்) உயர்த்தப்பட்டதற்கான அறிவிக் கையை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது.
புதிய ஊதிய முறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்ந்துள்ளது. அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.30,748 கோடி கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி உலகின் உயர்ந்த போர்க் களமான சியாச்சினில் பணியாற்றி வரும் வீரர்களுக்கு மாதப்படி ரூ.14,000 இருந்து, ரூ.30,000-மாக உயர்த்தப்பட் டுள்ளது. அதிகாரிகளுக்கு ரூ.21,000 இருந்து ரூ.42,500 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இதேபோல் உயர்ந்த சிகரங்களில் பணியாற்றுவதற் காக வழங்கப்பட்ட படித்தொகை யும் ரூ.16,800 இருந்து ரூ.25,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
வன்முறையை அடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வீரர்களின் மாத படித்தொகை ரூ.6,000 இருந்து ரூ.16,900-மாக உயர்ந்துள்ளது. நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை யினருக்கான படித்தொகையில் அதிகாரிகளுக்கு ரூ.17,300 இருந்து ரூ.25,000 மாகவும், வீரர்கள் நிலை யிலான பதவிகளுக்கு ரூ.8,400 இருந்து ரூ.16,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அமைதியான பகுதிகளில் பணி யாற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரேஷன் படித்தொகை வங்கிக் கணக்கு களில் செலுத்தப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இதேபோல் கடற் படை வீரர்களுக்கான மாதப்படித் தொகையும் ரூ.17,300 முதல் ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டுள் ளது.