

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, ''துப்பாக்கிச் சண்டையில் கிஃபாயத் என்னும் தீவிரவாதி கொலை செய்யப்பட்டார். ஜஹாங்கீர் என்னும் தீவிரவாதி உட்பட இருவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முகாஜிதீன் தீவிரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை காலையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. அங்கே இன்னும் தாக்குதல் நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.