

ஜம்மு காஷ்மீரில் இன்று (சனிக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நில நடுக்கம் குறித்து இந்திய வானியல் துறை கூறும்போது, ஜம்மு காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இன்று (சனிக்கிழமை) மதியம் 3.20 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் அதிக அளவில் நில நடுக்க அதிர்வுகள் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.