

ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த சலீம் முகிம் கானை கடந்த 2008 முதல் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களின் தீவிரவாத தடுப்புப் படை போலீஸாரின் கூட்டு முயற்சியில் மும்பை விமான நிலையத்தில் சலீம் முகிம் கான் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசம், பதேபூர் அருகேயுள்ள ஹாத்கோன் கிராமத்தைச் சேர்ந்த அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.