

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசாய்பாபா ஷன்ஸ்தான் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ரூபால் அகர்வால் கூறியதாவது:
குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சாய்பாபா கோயிலுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இவர்களில் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் பணமாக ரூ. 2.94 கோடியும், கோயிலில் உள்ள நன்கொடை வசூல் மையங்கள் மூலம் பணமாக ரூ.1.40 கோடியும் பெறப்பட்டது.
மேலும் ஆன்-லைன், டெபிட் கார்டு, காசோலை, வரைவோலை மூலமும் பக்தர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். மொத்தம் ரூ.5.52 கோடி நன்கொடை கிடைத் துள்ளது. இது கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ. 1.40 கோடி அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.