

உத்தரபிரதேசத்தில் கன்வார் புனித யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஆபாச பாடல்களைக் கேட்கக் கூடாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை ‘கன்வார் யாத்திரை’ என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யிலான அரசு சிறப்பாகச் செய்துள்ளது.
இந்நிலையில், யாத்திரை யானது நேற்று தொடங்கியுள்ளது. இதற்கிடையே கோரக்பூர் சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். ‘யாத்திரையின் போது ஆபாச பாடல்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும். மேலும் தீபாவளி அன்று லட்சுமி தேவியை வணங்கிய பின்னர் சூதாட்டத்தில் ஈடுபடுவது தவறானது’ எனக் கூறியுள்ளார்.