பாவனா கடத்தல் வழக்கு: நடிகை காவ்யா மாதவன் அலுவலகத்தில் சோதனை

பாவனா கடத்தல் வழக்கு: நடிகை காவ்யா மாதவன் அலுவலகத்தில் சோதனை
Updated on
1 min read

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல்ரீதியாக துன்புறுத் தியது. இதுதொடர்பாக பல்சர் சுனி, மார்ட்டின், விஜிஷ் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சில நாட் களுக்கு முன்பு நடிகர் திலீபிடம் சுமார் 13 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கடந்த 1998-ல் நடிகர் திலீப் - நடிகை மஞ்சு வாரியார் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2014-ல் விவாகரத்து செய்தனர். பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் நடிகை காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்தார்.

படப்பிடிப்புகளில் திலீப், காவ்யா மாதவன் நெருக்க மாக பழகி வருவதை மஞ்சு வாரியாரிடம் சொல்லி அவர் களின் பிரிவுக்கு பாவனா காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்க நடிகர் திலீபின் ஏற் பாட்டில் பாவனா கடத்தப் பட்டார் என்று குற்றம் சாட்டப் படுகிறது. இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்து வருகிறார்.

பாவனாவை கடத்திய போது பல்சர் சுனியும் கூட்டாளி களும் அவரை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்கள் அடங்கிய மெமரி கார்டு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்சர் சுனி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவன அலுவலகத்தில் செல்போன் மெமரி கார்டை அளித்ததாக கூறியுள்ளார்.

கொச்சி அருகே காகநாட்டில் உள்ள நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் கடந்த 30ம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர். அங்குள்ள கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா பதிவுகள் பல மணிநேரம் ஆய்வு செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in