Published : 24 Jul 2017 10:38 AM
Last Updated : 24 Jul 2017 10:38 AM

மருந்துகள் பற்றி மிகைப்படுத்தி விளம்பரம் வெளியிடும் சேனல்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

மருந்துகளின் பலன் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங் களை ஒளிபரப்பும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இயக்குநர் அமித் கேடோச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில தொலைக்காட்சி சேனல் களில் ஆயுர்வேத மருந்துகள் என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து விளம் பரங்கள் வெளியிடப்படுகின்றன. இதனால் மக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் எங்களிடம் புகார் அளித்துள்ளது.

மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. எனவே ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருந்துகள் தொடர்பாக பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட, விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் சர்க்கரை நோயாளிகளுக்காக சந்தையில் ஓர் ஆயுர்வேத மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான விளம்பரம் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பானது. அந்த விளம்பரத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்ததால் விளம்பர ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் பாத் நாயக், மக்களவையில் அண்மையில் பேசியபோது, ஆயுர்வேத மருந்துகள் தொடர்பாக மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடை செய்ய இந்திய விளம்பர தர கவுன்சில் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த கவுன்சில், பத்திரிகை, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் போலி ஆயுர்வேத மருந்து விளம்பரங்கள் குறித்து கண்காணித்து தகவல் அளிக்கும். அதன்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x