

ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்கு (ஐஏஎப்) சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியது.
ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட் டம், பலேசார் பகுதியில் மிக்-23 ரக பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பற்றி எரிந்தது. முன்ன தாக விமானியும் துணை விமானி யும் பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.
இவர்கள் வழக்கமான பயிற்சி யில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நேரிட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.