Published : 10 Nov 2014 10:11 am

Updated : 10 Nov 2014 10:12 am

 

Published : 10 Nov 2014 10:11 AM
Last Updated : 10 Nov 2014 10:12 AM

தபால்துறையில் காலியிடங்கள்

டெல்லி தபால் துறை, தபால்காரர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. நவம்பர் 3 முதல் டிசம்பர் 3 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:


போஸ்ட்மேன் 732, மெயில் கார்டு-08

வயது: 18 27. அரசு விதிமுறைகளின் படி வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்போ அதற்கு இணையான படிப்போ முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்துப் பிரிவினருக்கும் ரூ. 100
எழுத்துத் தேர்வுக்குக் கட்டணம் ரூ. 400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி, பெண்கள் ஆகியோருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

உரிய தகுதியுடையவர்கள் >www.indiapost.gov.in என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 03.12.2014

கூடுதல்விவரங்களுக்கு:>http://www.indiapost.gov.in/Pdf/PM2014_03nov14.pdf

சிண்டிகேட் வங்கியில் புரோபேஷனரி ஆபீஸர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓராண்டு பயிற்சிக்குப் பின்னே அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.

காலிப்பணியிடங்கள்: 400

வயது: 01.10.2014 அன்று 20லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோர் 55 சதவீத மதிப்பெண்களும், பிறர் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: போட்டித் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 50. பிறருக்கு ரூ. 500. விண்ணப்பக் கட்டணத்தை நவம்பர் 18-ம் தேதிக்குள் ஆன்லைனில் கட்ட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் >http://www.syndicatebank.in/ என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 5 முதல் நவம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தேதி: 18.11.2014

கூடுதல் விவரங்களுக்கு: >http://goo.gl/ajwvWP


வேலை வேண்டுமாவேலைவாய்ப்புதபால் துறை வேலைசிண்டிகேட் வங்கி வேலைபேங்க் வேலை

You May Like

More From This Category

More From this Author