ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் வாக்களிப்பு

ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் வாக்களிப்பு

Published on

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவும், அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நேற்று வாக்களித்தனர். குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஹைதராபாத்தில் உள்ள தலைமைச் செயலக அரங்கில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது முதல் வாக்கை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து சபாநாயகர் மதுசூதனாச்சாரி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் உள்ள தலைமைச் செயலகவளாகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சபாநாயகர் கோடல சிவப்பிரசாத், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in