Published : 12 Jul 2017 08:35 AM
Last Updated : 12 Jul 2017 08:35 AM

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்: லஷ்கர் தீவிரவாத அமைப்புதான் காரணம் - காஷ்மீர் சரக ஐஜிபி முனீர் கான் தகவல்

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியது லஷ்கர் இ தொய்பா என்று தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் அனந்தநாக் மாவட் டத்தில் நேற்று முன்தினம் இரவு அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் பலியாயினர்.

இதுகுறித்து காஷ்மீர் சரக ஐஜிபி முனீர் கான் நேற்று கூறும்போது, “அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கமே காரணம். குறிப்பாக இந்தத் தாக்குதலுக்கு இஸ்மாயில் என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளார்” என்றார்.

இந்த தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் அமீத் அன்சாரி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு

தீவிரவாதிகளால் சுட்டுக்கொல் லப்பட்ட 7 யாத்ரீகர்களில் 2 பெண்கள் மகாராஷ்டிர மாநிலத்தையும் மற்றவர்கள் குஜராத் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். இவர்களது சடலங்கள் அவர்களது சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.

இதுபோல, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தாக்குதலின்போது துணிச்சலுடன் செயல்பட்டு மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றிய பஸ் ஓட்டுநர் சலீம் ஷேக் கபூருக்கு ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுதவிர, பலியானோர் குடும்பத் தினருக்கு தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ.1.5 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஓட்டு நருக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவித் துள்ளது. பலியானோர் குடும்பத்தின ருக்கு தலா ரூ.7 லட்சமும் காய மடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்முவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பஜ்ரங் தளம் தொண்டர்கள் சாலையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் | படங்கள்: பிடிஐ

ஜம்முவில் பந்த்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜம்முவில் நேற்று காங்கிரஸ், விஎச்பி, ஜேகேஎன்பிபி, தேசிய மாநாடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

ராணுவ தளபதி ஆய்வு

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதையடுத்து, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று ஸ்ரீநகருக்கு சென்றார். அங்கு மாநில டிஜிபி மற்றும் சிஆர்பிஎப் டிஜி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தகவலை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் கண்டனம்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க தூதரின் ட்விட்டர் பக்கத்தில், “அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக் கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரமர் மோடிக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “காஷ்மீரில் யாத்ரீ கர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யது கொடூரமானது. இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந் தேன். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தி யாவுடன் இணைந்து பணியாற்று வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கேள்வி

தாக்குதல் நடக்கக்கூடும் என முன்கூட்டியே உளவுத் தகவல் கிடைத்தும் அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கத் தவறியது ஏன் என்பதை அரசு அலசி ஆராய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளரை தேர்வு செய்ய 18 எதிர்க்கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின. அப்போது அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், “அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது இந்தியாவின் பன்முகத்தன்மை மீதும் மனிதநேயத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். முன்கூட்டியே தாக்குதல் பற்றி உளவுத் தகவல் கிடைத்தும், அதைத் தடுக்க முடியாமல் போனது எப்படி என்பதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து யாத்திரை

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு எதிராக தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்திய போதும், 22,633 யாத்ரீகர்கள் நேற்று அமர்நாத் புனிதப் பயணத்தை தொடர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x