

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் சிறுமியின் சடலத்தை அவரது தாத்தா சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் பரிதாபாத் தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லட்சுமி(9) என்ற சிறுமி அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் கடந்த 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச் சைக்கு ரூ.6,000 செலவாகும் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
அதற்கு பணம் இல்லாத தால் பெற்றோர், உறவினர்கள் பரிதாபாத் அரசு மருத்துவ மனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் இருந்து சிறுமியின் உடலை கொண்டு செல்லும்படி உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனால் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டது. சிறுமியின் உறவினர்களால் தனியார் வாகனத்தை வாடகைக்கு அமர்த்த பணம் இல்லை. எனவே பேத்தியின் உடலை தாத்தாவே தோளில் சுமந்தபடி வீட்டுக்கு கொண்டு சென்றார். இதைக் கண்ட பத்திரிகை நிருபர்கள் சிலர் தனியார் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்து உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
சிறுமியின் உடலை தாத்தா தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங் களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.