

அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியின் முதலாண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் (ஜூலை 8) காஷ்மீரில் அனுசரிக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அமர்நாத் யாத்திரை அன்றைய தினம் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 4,411 யாத்ரீகர்கள் கொண்ட புதிய குழு, ஜம்முவின் பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து காஷ்மீர் புறப்பட்டு சென் றது. கடந்த ஜூன் 29-ம் தேதி தொடங் கிய அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் முடி வடைகிறது. இதுவரை லட்சத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங் கத்தை தரிசித்துள்ளனர். இந்த யாத்திரையில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.