Last Updated : 07 Jul, 2017 10:05 AM

 

Published : 07 Jul 2017 10:05 AM
Last Updated : 07 Jul 2017 10:05 AM

குடியரசுத் தலைவர் தேர்தல்: ஆம் ஆத்மி கேஜ்ரிவாலை கண்டுகொள்ளாத கட்சிகள்

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டு, டெல்லி முதல் வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங் கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலை இதுவரை எவரும் அணுகவில்லை.

வரும் 17-ம் தேதி நடைபெற வுள்ள குடியரசுத் தலைவர் தேர்த லில் ஆளும் கூட்டணி வேட்பாள ராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப் பட்டுள்ளார். இவரது வெற்றிக்காக எதிர்க்கட்சிகளை அணுகுவதற்கு, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் கொண்ட குழுவை பாஜக தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார். இம்மூவரில் ஒருவர் கூட குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலை கண்டு கொள்ளவில்லை.

ஆளும் கூட்டணி தங்கள் வேட் பாளர் ராம்நாத் கோவிந்துக்கு 30 கட்சிகளின் ஆதரவு இருப்ப தாக கூறியுள்ளது. ராம்நாத் கோவிந் துக்கு எதிராக 17 எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீரா குமார் போட்டியிடுகிறார். இந்த இரு அணிகளிலும் 47-க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்தப் பட்டியலில், நாட்டின் தலைநகரான டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இடம் பெறவில்லை. இரு அணிகளும் ஆம் ஆத்மி கட்சியை இதுவரை கண்டுகொள்ளாமல் உள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் வாக்குகள் மட்டுமே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப் போவதில்லை. நாங்கள் அளிக் கும் வாக்குகள் எங்களுக்கு எதிர் காலத்தில் பலன் தரும் வகையில் இருக்க வேண்டும். எனவே, வாக்கு களுக்காக எங்களை யாராவது அணுகும் வரை காத்திருப்பது என முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சிகள் கூடி இருந்தன. அப்போது ஆம் ஆத்மி கட்சியையும் நம்முடன் இணைக்கலாம் என மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச் சூரி வலியுறுத்தினார். ஆனால் இதை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனி னும், கேஜ்ரிவாலுடன் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர் ஜிக்கு அரசியல் ரீதியான நட்பு நிலவுவதால் அவர் மூலமாக கேஜ்ரி வாலை எதிர்க்கட்சிகள் அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கூட்டணி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் உ.பி.யையும் இவரை எதிர்த்துப் போட்டியிடும் மீரா குமார் பிஹாரையும் சேர்ந்தவர் கள் ஆவர். இவ்விரு மாநிலங் களிலும் எம்.பி., எம்எல்ஏக்கள் தங்கள் மாநில வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் கிளம்பியுள்ளது.

உ.பி.யில் அகிலேஷ் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ் வாதி கட்சியும் மாயாவதி தலைமை யிலான பகுஜன் சமாஜ் கட்சியும் மீரா குமாரை ஆதரிப்பதாக அறிவித் துள்ளன. ஆனால், அகிலேஷுக்கு எதிராக முடிவுகளை அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் எடுத்து வருகிறார். முலாயம் வழியை அவரது தம்பி சிவ்பால் சிங் யாதவும் பின்பற்றி வருகிறார்.

அகிலேஷின் தீவிர ஆதரவாளரான சுயேச்சை எம்எல்ஏ ராஜா பய்யா என்கிற ரகுராஜ் பிரதாப் சிங், ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். எனவே உ.பி.யில் கட்சி மாறி வாக்குகள் விழ வாய்ப்புள்ளது. இதேநிலை பிஹாரிலும் நிலவு கிறது. பாஜக கூட்டணி மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் தங்கள் மாநில வேட்பாளருக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிக்கலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x