மருத்துவ சேவை மறுப்பு: கேரளாவில் ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவமானது

மருத்துவ சேவை மறுப்பு: கேரளாவில் ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவமானது
Updated on
1 min read

மருத்துவர் இல்லை எனக் கூறி மருத்துவ சேவை மறுக்கப்பட்டதால் ஆட்டோ ரிக்‌ஷாவில் பெண்ணுக்கு பிரசவமானது.

கேளர மாநிலம் பழையனூர் வடக்கெத்தரா அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக பழங்குடி பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு வரும்போது மணி இரவு 11. அந்த நேரத்தில் அங்கே மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்க்க முடியாது; வேறு மருத்துவமனைக்கு செல்லவும் எனக் கூறி அப்பெண்ணை திருப்பியனுப்பியுள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சேவை ஏதும் ஏற்படுத்தித் தரவில்லை.

அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு பணம் இல்லாததால் அப்பெண் தனது கணவருடன் வீட்டுக்கு திரும்ப முடிவு செய்தார். வீடு திரும்ப முற்பட்டபோது ஆட்டோவிலேயே பிரசவமானது. இது குறித்து தகவலறிந்ததும் பஞ்சாயத்து அதிகாரிகளும் போலீஸாரும் வந்து தாயையும் சேயையும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in