Published : 05 Nov 2014 12:19 PM
Last Updated : 05 Nov 2014 12:19 PM

தெலங்கானா முதல் பட்ஜெட் தாக்கல்: தியாகிகள் குடும்ப நலனுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

தெலங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஈடெல ராஜேந்தர் தாக்கல் செய்தார். தெலங்கானா போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் குடும்பத்தார் நலனுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) ஆட்சியில் உள்ளது.

இந்த அரசு மாநிலத்தின் முதல் பட்ஜெட்டை இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. நிதியமைச்சர் ஈடெல ராஜேந்தர் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

* தெலங்கானா போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் குடும்பத்தார் நலனுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகள் கடனை ரத்து செய்ய ரூ.4,250 கோடி ஒதுக்கீடு.

* நாட்டின் விதை களஞ்சியமாக, தெலங்கானாவை மாற்ற திட்டம்

* ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

* புதிதாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.51,000 வழங்கும் கல்யாணலட்சுமி திட்டத்திற்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு

* நிலமற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலம் வழங்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x