8 வயது சிறுவனின் உயரம் 6 அடி 6 அங்குலம்: ‘உலகிலேயே மிக உயரமானவர்’ என்ற சாதனை படைத்தார்

8 வயது சிறுவனின் உயரம் 6 அடி 6 அங்குலம்: ‘உலகிலேயே மிக உயரமானவர்’ என்ற சாதனை படைத்தார்
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது நிரம்பிய கரண் சிங், இந்த வயதில் உலகிலேயே மிக உயரமானவர் என்ற சாதனை யைப் படைத்துள்ளார். அவரது உயரம் 6 அடி 6 அங்குலம் ஆகும்.

கரண் சிங்கின் தாயார் பெயர் ஷ்வேட்லானா. இவரது உயரம் 7 அடி 2 அங்குலம். இதையடுத்து இந்தியாவின் மிக உயரமான பெண்மணி என்ற பட்டத்தை ஷ்வேட்லானா பெற்றார். அவர் வழியில் வந்த கரண் சிங், பிறக்கும்போதே 7.8 கிலோ எடையுடனும், 63 சென்டி மீட்டர் உயரத்துடனும் இருந்தார்.

இதனால் பிறந்த உடனே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் கரண் சிங். இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு 8 வயதாகிறது. இப்போதே 6 அடி 6 அங்குலம் உயரத்துக்கு வளர்ந்துவிட்டார். இதனால் உலகிலேயே இந்த வயதில் மிக உயரமானவர் என்ற பட்டத்தை கரண் சிங் தட்டிச் சென்றுள்ளார். தனது பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் வருங்காலத்தில் மருத்துவரா கவோ அல்லது கூடைப்பந்தாட்ட வீரராகவே வருவேன் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கரண் சிங் கூறுகை யில், ‘எனது நண்பர்களைவிட நான் உயரமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

கரண் சிங்கின் தாய் ஷ்வேட் லானா கூடைப்பந்தாட்ட வீராங் கனை. இந்திய கூடைப்பந்தாட்ட அணியில் இடம் பிடித்த அவர் தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ஷ்வேட் லானா கூறும்போது, ‘அதிக உயரமாக இருப்பது விளையாடு வதற்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in