

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புதன்கிழமை இரவு, காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பா மாவட்டம் ராம்கர் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதேபோல் மக்வால் பகுதியிலும் இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்திய தரப்பில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏதுமில்லை. இருப்பினும், இந்திய தரப்பில் இருந்து பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை" என்றார்.