Published : 06 Jul 2017 08:09 AM
Last Updated : 06 Jul 2017 08:09 AM

சிக்கிம் எல்லையில் தொடர்ந்து பதற்றம்: இந்திய படைகளை வாபஸ் பெற சீனா தூதர் வலியுறுத்தல்

‘‘சிக்கிம் எல்லையில் குவிக்கப்பட் டுள்ள படைகளை இந்தியா எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தற்போது நிலவும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவே சீனா விரும்புகிறது. அதற்கு இதுதான் முன்நிபந்தனை’’ என்று சீனா கூறியுள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநிலத் தில் சீனாவின் எல்லை (டோங்லாங்), பூடான் எல்லை (டோக்லாம்) ஆகியவை சந்திக்கி ன்றன. மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இந்த இடத்தில் சீனா சாலை போடும் பணிகளைத் தொடங்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் பகுதியில்தான் சாலை அமைக்கப்படுகிறது என்று அந்நாடு கூறி வருகிறது. இதை இந்தியாவும், பூடானும் மறுத்து வருகின்றன. பூடானுக்கு தனி ராணுவம் இல்லாததால், அங்கு இந்திய ராணுவமே பாதுகாப்புப் பணியில் உள்ளன.

இந்நிலையில் சிக்கிம் எல்லை யில் இந்தியா சீனா ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லியில் நேற்று சீனா தூதர் லூ சவோஹுய் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சிக்கிம் எல்லையில் சீனா பகுதிக்குள் குவிக்கப்பட்டுள்ள படைகளை, இந்தியா எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அமைதியான தீர்வு காணவே சீனா அரசு விரும்புகிறது. இதை சீனா தெளிவாகக் கூறிவிட்டது. அமைதியான தீர்வுக்கு முன்னர், தனது படைகளை இந்தியா வாபஸ் பெற வேண்டும். இதுதான் முன் நிபந்தனை. இதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது இந்திய அரசுதான்.

இவ்வாறு சீனா தூதர் லூ சவோஹுய் கூறினார்.

இதற்கிடையில், சீனா வெளி யுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெனரல் ஷுவாங், பெய்ஜிங்கில் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘இந்தியா சீனா பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி வருவதாக இந்தியா கூறிவருகிறது. இதன்மூலம் மக்களைத் திசைதிருப்ப இந்தியா முயற்சிக்கிறது’’ என்று கூறினார்.

இதற்கிடையில், ஜி20 மாநாடு ஜெர்மனியில் இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இந்திய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x