Last Updated : 10 Jul, 2017 09:18 AM

 

Published : 10 Jul 2017 09:18 AM
Last Updated : 10 Jul 2017 09:18 AM

குடியரசு துணை தலைவர் தேர்தல் வேட்பாளர்: எதிர்க்கட்சிகள் புது முடிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வேட்பாளர் குறித்து வரும் 11-ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.

வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 18-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக, இந்தத் தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து வரும் 11-ம் தேதி நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x