Last Updated : 22 Jul, 2017 06:32 PM

 

Published : 22 Jul 2017 06:32 PM
Last Updated : 22 Jul 2017 06:32 PM

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ வின்சென்ட் கைது

51 வயது பெண்மணி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஜூலை 22, 2017 அன்று கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.வின்சென்ட் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பாலியல் தொந்தரவுக்காளான இந்த 51 வயது பெண்மனி மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை முயற்சி செய்தார்.

கோவளம் எம்.எல்.ஏ. வின்சென்ட்டைக் கைது செய்வதற்கு முன் போலீஸ் குழு 2 மணி நேரம் குடைச்சல் விசாரணை மேற்கொண்டது. பிறகு மேலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதிக்கு போலீஸ் குழு நண்பகல் 12.30 மணிக்கு வந்து 2 மணிநேரம் எம்.எல்.ஏ.விடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.

வின்சென்ட் முன் ஜாமீன் மனுவை ஏற்கெனவே மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட வின்சென்ட் விவகாரம் குறித்து போலீஸ் குழு கொல்லம் போலீஸ் உயரதிகாரி எஸ்.அஜீதா பேகம் என்பவரைச் சந்திக்கின்றனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்மணி தன் கணவரிடம் இதைத் தெரிவிக்க அவர் உள்ளூர் காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக புகார் அளித்தார்,

அதாவது தன் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு அளித்ததாக அவர் புகாரில் குறிப்ப்பிட்டுள்ளார்.

தன் மீதான இந்தப் புகாரை மறுத்த வின்சென்ட் தனக்கு எதிராக அரசியல் சதி தீட்டப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஜூலை 19, 2017 அன்று துன்புறுத்தலுக்கு ஆளான அந்தப் பெண்மணி ஏகப்பட்ட தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி

மேற்கொண்டதால் இந்த விவகாரம் வெளியானது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் உயிர் பிழைத்தார்.

இவரிடமிருந்தும் போலீஸ் குழு வாக்குமூலம் சேகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஊடகங்களில் இந்தப் பெண்மணி தெரிவிக்கும் போது, எம்.எல்.ஏ. வின்சென்ட் தன்னை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் 2 சந்தர்ப்பங்களில் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டார் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த மகளிர் தலைவர்கள் பிந்து கிருஷ்ணா மற்றும் ஷனிமோல் உஸ்மான் ஆகியோர் வின்சென்ட் பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே சிபிஎம் கட்சியின் இளைஞர் பிரிவு திருவனந்தபுரத்தில் ஆர்பாட்டம் மேற்கொண்டு எம்.எல்.ஏ.யின் உருவபொம்மையை எரித்து கோபத்தை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x