

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் நூற்றுக்கும் மேற் பட்டோர் செம்மரங்களை வெட்டி கடத்தி வருவதாக திருப்பதி அதிரடிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டிஐஜி காந்தாராவ் உத்தரவின் பேரில் அதிரடிப்படை போலீஸார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீ ஸாரை கண்டதும் வேன் ஒன்றில் ஏற்றிய செம்மரங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றது. பிறகு அங்கிருந்த செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி என மதிப் பிடப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற கடத்தல் கும்பலை அதிரடிப் படையினர் தேடி வருகின்றனர்.