

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயண செலவு குறித்த கேள்விக்கு, பிரதமர் அலுவலகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதுவரை மோடி, மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயணங் களுக்கு எவ்வளவு செலவிடப் பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர் நுதன் தாகூர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
இதுகுறித்து நுதன் தாகூர் கூறும்போது, ‘‘மன்மோகன், மோடியின் வெளிநாட்டு பயணங் களுக்கான செலவுகள் எவ்வளவு, அவற்றின் எல்லா நகல்களையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஆர்டிஐ.யின் கீழ் கேள்வி கேட்டிருந்தேன். அந்தக் கேள்விக்கு பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. நான் கேட்ட கேள்வி தெளிவற்றதாகவும் மிக விரிவானதாகவும் உள்ளது என்று கூறி கடந்த வியாழக்கிழமை மத்திய தகவல் ஆணையம் மற்றும் பிரதமர் அலுவலக செயலாளர் பிரவீன் குமார் பதில் அனுப்பியுள்ளார்’’ என்று நேற்று தெரிவித்தார்.
மேலும் நுதன் தாகூர் கூறும் போது, ‘‘என்னுடைய கேள்விக்கு பதில் கேட்டு நிச்சயம் மேல்முறை யீடு செய்வேன்’’ என்றார்.