

ஆந்திர மாநில மீன்வளம், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஆதிநாராயண ரெட்டி. இவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக, நேற்று காலையில் ஹைதரா
பாத்திலிருந்து காரில் விஜயவாடா வுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சூர்யாபேட்டை அருகே சென்று கொண்டிருந்த இவரது கார் சாலையின் தடுப்பு சுவர் மீதி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அமைச்சர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் இவருடன் பயணித்த 2 மெய்க்காப்பாளர்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.