அமர்நாத் தாக்குதலுக்கு கண்டனம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அமர்நாத் தாக்குதலுக்கு கண்டனம்:  நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
Updated on
1 min read

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) கூடியது.

இரு அவைகளும் கூடியதும், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டத்துடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

கடந்த 10-ம் தேதி இரவு அமர்நாத் யாத்ரீகர்கள் மீது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in