

பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக புத்தகம் ஒன்றை எழுதவுள்ளார்.
இளைஞர்களுக்கான இந்தப் புத்தகத்தில், தேர்வுக் காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு போக்குவது, மனதை சமநிலையில் வைத்துக்கொள்வது எப்படி, தேர்வுக்கு பிறகு என்ன செய்வது என்பது போன்ற பல்வேறு யோசனைகளை கூறவுள்ளார்.
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் (பிஆர்எச்) என்ற பதிப்பகம் இந்தப் புத்தகத்தை பல்வேறு மொழிகளில் வெளியிடுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவுள்ளது.