மோடியை பிரதமராக்க வேண்டுமென்ற மக்களின் விருப்பம் அதிகரித்துள்ளது: பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜேட்லி கணிப்பு

மோடியை பிரதமராக்க வேண்டுமென்ற மக்களின் விருப்பம் அதிகரித்துள்ளது: பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜேட்லி கணிப்பு
Updated on
1 min read

நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டுமென்ற நாட்டு மக்களின் விருப்பம் அதிகரித்துள்ளது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இது குறித்து ஜேட்லி விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: வாரணாசியில் மோடி வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோது அவருடன் சென்ற ‘மனிதக் கடல்’ ஏற்பாடு செய்யப் பட்டது அல்ல, தன்னெழுச்சியாக ஏற்பட்டது. மோடிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு வெளிப் பட்டுள்ள நிலையிலும், மோடி அலை ஏதுமில்லை என்று பிர தமர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

இதுவரை மோடி நாடு முழுவதும் 400-க்கு மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசி யுள்ளார். அங்கெல்லாம் திரண்ட மக்கள் கூட்டம் இதற்கு முன் கண்டிராதவை. மோடியின் பிரச்சாரம் பாஜக அணியினருக்கும், ஆதரவா ளர்களுக்கும் எழுச்சியூட்டி யுள்ளது. எதிர்த்தரப்பினரின் ஆத்திரமூட்டலைப் பொருட்படுத் தாமல் நல்லாட்சிக்கு செயல்திட் டத்தை வகுத்து உரையாற்றுவது தெளிவாகத் தெரிகிறது.

வடக்கு, மேற்கு, மத்திய இந்தியாவில், பாஜகவுக்கு கணிசமான ஆதரவு தளம் உள்ளதால் அங்கெல்லாம் மோடி அலை தென்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அதே நேரத்தில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அவர் மீது ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நல்லெண்ணம் பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகளை பெரு மளவு அதிகரிக்க வழிவகுத் துள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் தங்களது ஆட்சியின் சாதனை களைக் கூறி ஆதரவு திரட்டு வதற்கு மாறாக எதிர்மறைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று ஜேட்லி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in