

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரை புனித யாத்திரையாக ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல் கின்றனர். உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு பக்தர்களும் ஏராள மானோர் ஐயப்பனைத் தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், ஐயப்பன் கோயில் உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
சபரி ஐயப்பன் கோயில் உண்டி யல் பணம் சமீபத்தில் எண்ணப் பட்டது. அப்போது உண்டியலில் இருந்த பணம் எண்ணும் இடத் துக்குக் கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப் போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 ரூபாய் நோட்டு ஒன்று காணப்பட்டது. ஐயப்பன் கோயில் உண்டியலில் வெளிநாட்டு கரன்சி கள் இருப்பது வழக்கம்தான். எனினும், பாகிஸ்தான் கரன்சி என் பதால் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.