

காஷ்மீரில் கடந்த 10-ம் தேதி அமர்நாத் யாத்ரீகர்களின் பேருந்து தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், யாத்ரீகர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
ஜம்மு, பகவதி நகர் முகாமில் இருந்து நேற்று அதிகாலையில் 4,105 யாத்ரீகர்கள் 191 வாகனங்களில் பல்தால் மற்றும் பஹல்காம் அடிவார முகாம்களை நோக்கி உரிய பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
தீவிரவாத தாக்குதல் நடந்த போதிலும் கடந்த திங்கட்கிழமை முதல் யாத்ரீகர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
யாத்ரீகர்களின் எந்த வாகனமும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு இன்றி செல்லக்கூடாது என்பதில் பாதுகாப்பு படையினர் உறுதியாக உள்ளனர். இதையொட்டி யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
கடந்த 29-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை 1 லட்சத்துக்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யாத்திரை முடித்துள்ளனர். இந்த ஆண்டு 40 நாட்கள் மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முடிவடைகிறது.