Last Updated : 15 Jul, 2017 10:25 AM

 

Published : 15 Jul 2017 10:25 AM
Last Updated : 15 Jul 2017 10:25 AM

சீனாவுடனான மோதல், காஷ்மீர் நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் அரசு விளக்கம்

சீன எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் காஷ்மீர் நிலவரம் குறித்து, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மூத்த மத்திய அமைச்சர்கள் நேற்று விரிவாக எடுத்துரைத்தனர்.

வரும் 17-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூடுகிறது. இதில் சீனாவுடனான மோதல் உட்பட பல்வேறு பிரச்சி னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி), ராம் விலாஸ் பாஸ்வான் (எல்ஜேபி), தாரிக் அன்வர் (தேசியவாத காங்கிரஸ்), சரத் யாதவ் மற்றும் கே.சி.தியாகி (ஐக்கிய ஜனதா தளம்), டெரிக் ஓ பிரயன் (திரிணமூல் காங்கிரஸ்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சீனாவுடனான மோதல், காஷ்மீர் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய 3 நாடுகளின் எல்லைகளும் டோகா லா என்ற பகுதியில் சந்திக்கின்றன. இந்தப் பகுதிக்கு சீனாவும் பூடானும் உரிமை கொண் டாடுகின்றன. இந்நிலையில் டோகா லா பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது. இதனால் இந்தியாவை கண்காணிக்க சீன ராணுவம் திட்ட மிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதையடுத்து, சாலை போடும் பணியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நீடிக்கிறது. இதனால் இரு நாட்டு ராணுவமும் அப்பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது.

இதுபோல, கடந்த 10-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரையை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டி ருந்த யாத்ரீகர்கள் மீது தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் பலியாயினர்.

மேலும் கடந்த 8-ம் தேதி. ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப் பட்டதன் முதலாம் நினைவுதினத்தை ஒட்டி, புல்வாமா, குல்காம், சோபியான் மற்றும் அனந்தநாக் மாவட்டங்களில் வன்முறை அதிகரித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x