

வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் சார்பாக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிப் பதற்காக நேற்று பெங்களூரு வந்த அவரை காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர், கர்நாடக அமைச்சர் ஆஞ்சநேயா உள்ளிட் டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து மீரா குமார் முன்னாள் பிரதமரும் மஜத தலைவருமான தேவகவுடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்களை சந்தித்து ஆதரவை கோரினார்.
இதனிடையே மீரா குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக சார்பாக நிறுத்தப்பட் டுள்ள ராம்நாத் கோவிந்தை எதிர்த்து 17 எதிர்க்கட்சிகளின் சார்பாக நான் நிறுத்தப்பட்டுள்ளேன். இந்த தேர்தல் இரு தனிப்பட்ட தலித் குடிமக்களுக்கான தேர்தல் அல்ல.
இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். சமூக நீதி, மனித உரிமை, மக்களாட்சியின் மதிப்பீடுகளை காப்பாற்ற நடக்கும் போட்டி. இதில் நான் பலிகடா அல்ல. அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நான் முதன்மை போராளியாக நிறுத்தப்பட்டு இருக்கிறேன்.
இவ்வாறு மீரா குமார் கூறினார்.