

சீனா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஏன் மவுனம் காக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா, சீனா, பூடான் சந்திக்கும் முச்சந்திப்பு எல்லைப் பகுதியில் சாலை அமைப்பதாகக் கூறி சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள் ளது. அதைத் தடுக்க இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் எல்லையில் குவிக்கப் பட்டுள்ளனர். பதிலுக்கு சீனாவும் அந்நாட்டு வீரர்களை குவித்துள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று தன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘சீனா விவகாரத்தில் நமது பிரதமர் நரேந்திர மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்’’ என பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.