இந்தியருக்கு கிரீன் நோபல் விருது

இந்தியருக்கு கிரீன் நோபல் விருது
Updated on
1 min read

இந்தியரான, சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால் இந்த ஆண்டு ஆசிய பகுதிக்கான 'கிரீன் நோபல்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் நடத்தி வந்த நிலக்கரிச் சுரங்கத்தை மூடியதன் மூலம் இந்த விருதை பெற்றுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரிச்சர்ட் மற்றும் டேவிட் கோல்ட்மேன் அமைப்புகள், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட ஆறு பகுதிகளிலும் சிறந்து செயல்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மதிப்பளிக்கும் விதமாக கடந்த 1990ஆம் ஆண்டு 'கிரீன் நோபல்' என்ற அமைப்பை உருவாக்கியது.

இந்த வகையில் இந்த ஆண்டு ஆசிய பகுதிக்கான கிரீன் நோபல் விருதுக்கு ரமேஷ் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் விழாவில் 'கிரீன் நோபல்' விருதை அவர் பெறுகிறார். இந்த விருதுக்கான பரிசுத்தொகை 1,75,000 அமெரிக்க டாலர் (ரூ.1.06 கோடி) ரமேஷ் அகர்வாலுக்கு வழங்கப்படுகிறது.

பெருகிவரும் தொழில்மயத்தில் இருந்து மக்களையும், சுற்றுச்சூழலையும் காப்பதற்காக ஜன் சேத்தனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ராமேஷ் நடத்தி வருகிறார்.

தாக்குதல்களுக்கு அஞ்சாத ரமேஷ்:

தொழிற்சாலைத் திட்டங்கள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மக்கள் இடம்பெயர்வதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தடுத்தார் ரமேஷ் அகர்வால். இதனையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அகர்வாலை துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும் அச்சுறுத்தல்களுக்கு அவர் அஞ்சவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in