Published : 25 Feb 2014 11:57 AM
Last Updated : 25 Feb 2014 11:57 AM

கட்சி பிளவுக்கு நிதிஷ் குமார் சதியே காரணம்: லாலு

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் திடீரென விலகியதற்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் சதித் திட்டமே காரணம் என லாலுபிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில்மொத்தமுள்ள 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து விலகியதாக தகவல்கள் பரவின. ஆனால் அதில் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது விலகலை மறுத்தனர்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் நேற்று இரவு ராப்ரி தேவியை சந்தித்து தாங்கள் கட்சியில் இருந்து விலக விரும்பவில்லை என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு நிதிஷ் குமாரே காரணம் என கூறியுள்ள லாலு, சட்டப்பேரவை சபாநாயகருடன் இணைந்து சதித் திட்டம் தீட்டிய நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டவதாகவும் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக பாட்னா விரைவதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x