Last Updated : 09 Apr, 2017 12:07 PM

 

Published : 09 Apr 2017 12:07 PM
Last Updated : 09 Apr 2017 12:07 PM

கொள்ளையர்கள் சுட்டதில் அமெரிக்காவில் இந்தியர் பலி: விசாரணை நடப்பதாக சுஷ்மா தகவல்

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம் ஜர்யால் (26). இவர் 25 நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில் பெட்ரோல் நிலை யத்துக்குள் பலசரக்கு கடையை அவரது குடும்ப நண்பர் நடத்தி வருகிறார். இந்த கடையில் ஜர்யால் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு அங்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர், விக்ரம் ஜர்யாலை துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர். உயிருக்கு பயந்து கடையில் இருந்த பணத்தை ஜர்யால் வழங் கியபோதும், கொள்ளையர்களில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்ததில் ஜர்யால் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த போலீஸார் அவரது உயிரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜர்யால் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜர்யாலின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த சம்பவம் தொடர்பாக சான் பிரான்சிஸ்கோ வில் உள்ள இந்திய தூதரகம் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், ‘‘அமெரிக்க புலனாய்வு அதிகாரி களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். பெட்ரோல் நிலையத்தில் இருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஜர்யாலின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும், விசாரணை குறித்து தெரிந்து கொள்வதற்கும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x