பண மதிப்பு நீக்கத்தினால் அத்தியாவசிய பொருள் விலை உயரவில்லை: ராம் விலாஸ் பாஸ்வான்

பண மதிப்பு நீக்கத்தினால் அத்தியாவசிய பொருள் விலை உயரவில்லை: ராம் விலாஸ் பாஸ்வான்
Updated on: 
1 min read

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் உணவு தானியங்கள் உட்பட 22 அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பருப்பு வகைகள், வெங்காயம் மற்றும் தக்காளி உள்ளிட்ட 22 அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் அவற்றின் விலை உயரவில்லை.

மேலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, 3.89 லட்சம் டன் கோதுமை, 1.84 கோடி டன் அரசி, 10.45 லட்சம் டன் பருப்பு வகைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

மேலும் கடந்த நவம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரையில், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அதிகாரிகள் 17,506 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பதுக்கலில் ஈடுபட்டதாக 1,524 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in