5 மாநில தேர்தலும் மக்கள் தீர்ப்பும்: மணிப்பூரில் ஆட்சி யாருக்கு?

5 மாநில தேர்தலும் மக்கள் தீர்ப்பும்: மணிப்பூரில் ஆட்சி யாருக்கு?
Updated on
1 min read

இம்பால் மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை பெற்றுத் தரவில்லை. ஆட்சி அமைப்பதில் அங்கு பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

60 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய இடங்களை இதர கட்சிகள் கைப்பற்றியுள்ளன. இதனால் அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைப்போம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஹவோகிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘மணிப்பூரில் காங்கிரஸ் புதிய அரசை அமைக்கும். ஒத்த கருத்து கொண்ட மாநில கட்சிகள் மற்றும் மதச்சார்பு இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட் டுவிட்டது. நாகா மக்கள் முன்னணியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டனர்’’ என்றார்.

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 36.3 சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக காங்கிரஸ் 35.1 சதவீதம் மற்றும் நாகா மக்கள் முன்னணி 7.2 சதவீத வாக்குகள் பெற்றிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in