Published : 12 Jul 2016 07:35 AM
Last Updated : 12 Jul 2016 07:35 AM

ஊரடங்கு உத்தரவை மீறி 3-வது நாளாக கலவரம்: காஷ்மீரில் பலி 30 ஆக உயர்வு - சோனியாவுடன் பாஜக ஆலோசனை

காஷ்மீரின் தெற்கு, வடக்குப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. ஆனால் அதையும் மீறி 3-வது நாளாக நேற்றும் கலவரம் நீடித்தது. அங்கு வன்முறை, கலவரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் புர்ஹான் முஷாபர் வானி (22) கடந்த 8-ம் தேதி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல் லப்பட்டார். இதைக் கண்டித்து கடந்த 9-ம் தேதி காஷ்மீரில் கலவரம் வெடித்தது.

கலவரம் பாதித்த 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அதை மீறி அப்பகுதி களில் நேற்று வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

கடந்த 9, 10-ம் தேதிகளில் நடந்த கலவரங்களில் 21 பேர் பலியாயினர். எனவே நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய போது போலீஸார் பொறுமை காத்தனர்.

அனந்த்நாக் மாவட்டம், ஜிர்போரா பகுதியில் மட்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டது. இதை தவிர பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற வில்லை என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரி வித்தன.

எனினும் ஏற்கெனவே நடந்த கலவரங்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் 9 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந் துள்ளது.

இன்று முழுஅடைப்பு

ஹுரியத் உள்ளிட்ட பிரி வினைவாத அமைப்புகள் நேற்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனால் வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்பட வில்லை. இன்றும் நாளை யும் முழுஅடைப்பு போராட்டம் நீட்டிக்கப்படுவதாக ஹுரியத் அறிவித்துள்ளதால் இன்னும் 2 நாட்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தெரி கிறது.

சோனியா அறிக்கை

இதனிடையே காஷ்மீர் நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காஷ்மீர் நிலைமை குறித்து ஆலோசனை நடத் தினார்.

மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக் கைகள் குறித்து சோனி யாவிடம் ராஜ்நாத் சிங் விவரித் தார்.

இதன்பின் சோனியா வெளி யிட்ட அறிக்கையில் தேசப் பாது காப்பு தொடர்பான விவகாரங் களில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அவசர ஆலோசனை

தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் அஜித் தோவல் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். காஷ்மீர் கலவரத்தைத் தொடர்ந்து அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு நேற்று டெல்லி திரும்பினார்.

அவர் நிருபர்களிடம் கூறிய போது, பிரச்சினைகள் எழும் போது அதற்கு தீர்வுகளும் நிச்சயம் உண்டு. காஷ்மீர் கலவரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும். அடுத்த 72 மணி நேரத்தில் காஷ்மீரில் அமைதி திரும்பும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x